காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
கொலை செய்யப்பட்ட நேர்மையான உணவுப் பாதுகாப்பு அதிகாரி பேயாக வந்தால் எப்படியிருக்கும் என்பதே `அருவம்'.
அரசுப் பள்ளியில் ஆசிரியரான கேத்ரீன் தெரசா, எவ்வித மணத்தையும் நுகரும் சக்தி இல்லாதவர். சமூக சேவையில் அக்கறையுடன் செயல்படுபவர். அவரைக் காதலிக்கும் சித்தார்த் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருக்கிறார். அவரது காதலை முதலில் மறுக்கும் கேத்ரீன், பின்பு ஏற்றுக் கொள்கிறார். ஆனால், ஒரு விபத்தில் சிக்கும்போது கேத்ரீனுக்கு திடீரென்று நுகரும் சக்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரையும் அவரது நண்பரையும் கொலை செய்கிறார் கேத்ரீன். அவர் ஏன் அவர்களைக் கொலை செய்தார், தன்னைக் கொலை செய்யத் துடிக்கும் மத்திய அமைச்சரின் தம்பி பிடியிலிருந்து எப்படித் தப்பித்தார் கேத்ரீன் என்பதுதான் படத்தின் கதை.
இயக்குநர் சாய் ஷேகர் ஒரு நல்ல கதையை எடுத்துள்ளார். ஆனால், சொல்ல வந்த படத்தின் மையக் கருவை ரொம்பவே சுற்றி இறுதியாகச் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல ஆக்ஷன் படத்துக்குரிய கதையைப் பேய்ப் படமாக மாற்றியதால் அதன் சுவாரசியம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.