சினிமா பிட்ஸ்


ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டும் தான் இனி நடிப்பேன் என்று முடிவெடுத்துள்ளார் தமன்னா. கல்யாணத்துக்கு முன்பு தானும் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட வேண்டும் என்ற கனவே இதற்குக் காரணமாம்.
`சைரா' படத்துலேயே நயனை மிஞ்சிட்டீங்களே அம்மணி...

ஸ்ருதிஹாசன் போதை பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாராம். ``மன அழுத்தம் காரணமாக விஸ்கி அருந்தும் பழக்கம் எனக்கு இருந்தது. தற்போது தீவிர சிகிச்சை மூலம் மீண்டு வந்துள்ளேன்'' என்று அவரே கூறியுள்ளார்.
அனுபவப்பட்டு திருந்துறது நல்லதுதான் பேபி...

‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். தகவலறிந்து சூர்யா ரசிகர்கள் படு குஷியில் இருக்கிறார்கள்.
சூரிக்கு அப்புறம் தானே சூர்யா படம்?

ரிலீசுக்கு 24 நாட்களுக்கு முன்பு படத்தைத் தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதைச் செய்யாததால், `பிகில்' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கலாம். பிரச்சினையைத் தீர்த்து வைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப் போகிறதாம் விஜய் தரப்பு.
அப்ப அடுத்த தேர்தல்ல அதிமுக வெற்றிக்கு அணிலாக உதவுவீங்களோ?

x