எல்லா பெருமையும் பெண்ணுக்கே!- ‘நிலா’ சாதனாவுடன் ஒரு சந்திப்பு


பகத்பாரதி
readers@kamadenu.in

எண்பதுகளின் நாயகிகளில் ஒருவர் சாதனா. சிவாஜி நடித்த ‘ஹிட்லர் உமாநாத்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது முதல் மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தவர். ‘மை டியர் லிசா’ சாதனா என்றால் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும். சின்னத்திரையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘நிலா’ நெடுந்தொடர் ஷூட்டிங்கில் சக கலைஞர்களுக்காக உணவு சமைத்து எடுத்துவந்து அன்பாய் பரிமாறிக்கொண்டிருந்த சாதனாவைச் சந்தித்துப் பேசினேன்.

சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்தது எப்படி?

தமிழ், தெலுங்கு, மலையாளம்னு தொடர்ந்து படங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். திருமணம், குழந்தைன்னு ஆனதுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருஷம் நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கிட்டேன். அப்புறம் என் ஃப்ரெண்ட் குட்டி பத்மினி மூலமா சின்னத்திரையில அறிமுகமானேன்.

x