அசுரன் - திரை விமர்சனம்


அண்ணனைக் கொன்றவனைப் பழி தீர்க்கிறான் தம்பி. ஏற்கெனவே மூத்தமகனை பலிகொடுத்த அப்பா, அதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்த இளைய மகனைக் காப்பாற்ற அவனோடு காட்டுக்குள் புகுகிறார். அப்பா தனுஷின் கோழைத்தனத்தை வெறுத்தே பயணிக்கும் இளையமகன் ஒருகட்டத்தில், அப்பாவின் வீரத்தைப் புரிந்து கொள்கிறார். அதன் பிறகு என்னவானது, இளைய மகனை வில்லன்களிடமிருந்து அப்பா காப்பாற்றினாரா என்பதே `அசுரன்' படத்தின் திரைக்கதை.

பூமணியின் வெக்கை நாவலை மூலக்கதையாக எடுத்துக் களமாடியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். கிராமங்
களுக்குள் இன்னமும் புரையோடிக் கிடக்கும் சாதியம், அதனால் எழும் வன்மம் என சமூகப் பிரச்சினைகளை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து கவனம் ஈர்க்கிறார்.

பிள்ளைகளுக்காக உருகுவது, ஊர்க்காரர்களின் காலில் விழுவது, பிள்ளைகளுக்கு ஆபத்து என்றவுடன் துவம்சம் செய்வது, மனைவியுடனான நேசம் என வாழ்ந்திருக்கிறார் தனுஷ். அதிலும் அசுரனாக மாறும் இடத்தில் மிரட்டியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்துக்காக உடல் அசைவுகள், நடை என அனைத்தையும் மாற்றியிருப்பது சிறப்பு.

தனுஷுக்கு மனைவியாக மஞ்சுவாரியர் தமிழுக்கு மிக ஆரோக்கியமான வரவு. தப்பு செய்தவர்களைக் கழுத்தில் கொக்கி போட்டு இழுத்து சண்டைக்கு அழைக்கும் காட்சியில் மிரட்டலையும், பிள்ளையைப் பறிகொடுத்த காட்சிகளில் துக்கத்தையும் மிக யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார்.

x