சினிமா பிட்ஸ்


‘கேம் ஓவர்’ படத்துக்குப் பிறகு தமிழில் வந்த பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டார் டாப்சி. நயன்தாரா போல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கும் டாப்சி, இந்திப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளாராம். இந்தியில்தான் சம்பளம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கிறது என்பதும் இதற்கு ஒரு காரணமாம்.
பெரிய தேசிங்கு ராணி... திரும்பி வந்துதான ஆகணும்?

‘விஜய் 64’ படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறாராம் விஜய். பொதுவாக சனி, ஞாயிறுகளில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமாட்டார் விஜய். ஆனால், இந்தப் படத்துக்காக சனி ஞாயிறு உள்பட மாதத்தில் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். சொந்தக்கார தயாரிப்பாளர் என்றால் இப்படி அனுசரித்துப் போகும் விஜய், மற்றவர்கள் படத்தில் ஏன் இப்படி நடந்து கொள்வதில்லை என்று கோலிவுட்டில் புலம்புகிறார்கள். 
அரசியலுக்கு வருவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்கிறார் போல..!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் சினிமாவில் நடிக்கிறார் என்பது பழைய செய்தி. அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்று அண்மையில் செய்தி வெளியானது. பதறிப்போன ஹன்சிகா, அந்தச் செய்தி உண்மையல்ல எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுத்திருக்கிறார்.
நயன்தாரா கூட நடிங்க அண்ணாச்சி...

விரைவில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் பாரதிராஜா. அதன் வழியாக, திரைப்படத் துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி மனம் திறந்து பேசப்போகிறாராம்.
சப்ஸ்கிரைப் பண்ணுங்க தமிழ் மக்களே...

x