பிட்லீ
சமீபத்தில் ‘கோன்பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சோனாக் ஷி, அனுமன், சஞ்சீவி மலையை யாருக்காக எடுத்து வந்தார் என்ற கேள்விக்கு, சீதைக்கு என்று தவறான பதிலைச் சொன்னார். இணையத்தில் பற்றிக்கொண்ட இவ்விஷயம் #YoSonakshiSoDumb என்ற ஹேஷ்டேக்கில் வைரல் ஆனது. ஆனால், இதையெல்லாம் சட்டை செய்யாத சோனாக் ஷி “எனக்குத் தெரியாத விஷயத்தை என்னிடம் கேட்டு என்ன பயன்? என்னைக் கலாய்த்து தாராளமாய் மீம்ஸ் போடுங்கள், எனக்கு மீம்ஸ் ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டார்.
கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழாருக்கு இந்த விஷயம் தெரியுமா?
பிரியாமணி நடித்த ‘ஃபேமலி மேன்’ வெப் சீரிஸ் ஹிட் அடிக்க, சமூக வலைதளங்களில் பிரியாமணிக்கு எக்கச்சக்க பாராட்டு. இதையடுத்து, சினிமாவில் வாய்ப்பு இழந்த நடிகைகள் பலரும் வெப் சீரிஸ் பக்கம் நகர ஆரம்பித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் முன்னாள் தமிழ் கதாநாயகிகள் சிலர் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்களாம்.
அதுவும் இல்லாட்டி, டிவி சீரியல் இருக்குதே?
தாய்லாந்தில் இருக்கும் சிம்பு இந்தியா திரும்பியதும் அவரது ரசிகர் மன்றத்தினரை வைத்து மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் டி.ராஜேந்தர். அத்துடன் சிம்பு ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றங்களையும் அரங்கேற்ற இருக்கிறாராம் டி.ஆர்.
மாநாடு இருக்கட்டும்... கல்யாணம் எப்ப சார்?