என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மலையாளப் படங்களுக்கென்று என்றென்றைக்கும் தனி மதிப்பு உண்டு. கேரள மண்ணின் அசல் வாழ்க்கையை, ஒப்பனைகளின்றி இயல்பாகப் பதிவுசெய்த படங்கள், பரீட்சார்த்த முயற்சிகள் என கேரளத் திரையுலகம் செழிப்புடன் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், தொடக்கத்தில் கேரளத் திரையுலகம் எதிர்கொண்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதிலும் மலையாளத் திரையுலகின் முதல் நாயகியான பி.கே.ரோஸி, ஊராரின் எதிர்ப்புக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். ஏழ்மையான பின்னணி, சமூகப் புறக்கணிப்பு என்று பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்த அந்த முதல் நாயகிக்கு இன்றைக்கு மரியாதை செய்திருக்கிறது மலையாளத் திரையுலகின் பெண்கள் அமைப்பான ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’.
முன்னணி நடிகை ஒருவரைச் சிலர் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப்புக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்ட அமைப்பு இது. திரைத் துறையில் இயங்கும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அமைப்பின் சார்பில், உலகளாவிய கலைப் படங்களை வெளியிடும் புதிய அமைப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கொச்சியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்குத்தான் பி.சி.ரோஸியின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அமைப்பின் பெயர், ‘பி.கே.ரோஸி ஃபிலிம் சொசைட்டி’. தன் மண்ணின் முதல் நடிகைக்குக் கடவுளின் தேசம் செய்திருக்கும் முதல் மரியாதை இது!
டேனியலும் ரோஸியும்