அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படம்... - ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ இயக்குநர் சசி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

மெல்லிய காதல் கதையை, அதிரவைக்கும் க்ளைமாக்ஸுடன் சொன்ன ‘சொல்லாமலே’ மூலம், 21 வருடங்களுக்கு முன்னர் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சசி. இடைவெளிகளுக்கு இடையிலும் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறார். ‘இதுதான் இவர் பாணி’ எனும் முத்திரைகளில் சிக்கிவிடாமல், வெவ்வேறு கதைக் களங்களுடன் அடுத்தடுத்து அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறார். ‘பூ’, 'பிச்சைக்காரன்' வரிசையில் அடுத்ததாக ‘சிவப்பு மஞ்சள் பச்சை'. படம் ரிலீஸான குஷியில் இருந்த சசியை காமதேனு பேட்டிக்காக சந்தித்ததிலிருந்து…

 `சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் ஆரம்பித்த புள்ளி எது?

நான் உதவி இயக்குநரா இருந்த சமயதில் , ஒரு எழுத்தாளரிடம் பேசிட்டு இருந்தேன். அப்போ அவரின் மச்சானுடனான அவரின் உறவைப் பத்தி சிலாகிச்சுப் பேசினார். “என் மச்சான் கூட உக்காந்து என்னால தண்ணி அடிக்கவும் முடியுது, அதே சமயம் அவன் காலேஜுக்குப் போகாம இருக்கான்னு என்கிட்ட என் மனைவி குறை சொல்லும்போது, அவனை என்னால் கண்டிக்கவும் முடியுது. சில நேரங்களில் நண்பனாகவும், சில நேரங்களில் தகப்பன் ஸ்தானத்தில் இருந்தும் அவனிடம் பழகுவது எனக்கு வித்தியாசமா இருக்கு சசி”ன்னு சொன்னார். எனக்கு கல்யாணம் ஆன பிறகு எல்லா ஆம்பளைக்கும் முதல் மகன் மச்சான் தான்னு எனக்கும் புரிஞ்சது. அந்த உணர்வுக்கு நான் கொடுத்த பூங்கொத்துதான் இந்தப் படம்.

x