சினிமா பிட்ஸ்


சமுத்திரக்கனியின், ‘அடுத்த சாட்டை’, மாதவனுடன் நடிக்கும் ‘சைலன்ஸ்', கிருஷ்ணன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்
படாத படம் என பிஸியாக இருக்கும் அஞ்சலி, நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

அஞ்சலிப் பாப்பா திரும்ப வந்திடுச்சி...

விக்ரம், விஜய் சேதுபதி, கார்த்தி என உச்ச நட்சத்திரங்களை வைத்து மணிரத்னம் எடுக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்'. இதில் முக்கியக் கதாபாத்திரமான வந்தியத்தேவனாக கார்த்தியும், பழுவேட்டரையராக விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாகக் கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

இன்னும் எத்தனை நாள்தான் கிசுகிசுக்கிறதோ தெரியல...

x