சிக்ஸர் - திரை விமர்சனம்


மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஆதி (வைபவ்). ஆறு மணிக்கு மேல் அவருக்குக் கண் தெரியாது என்பதை அறியாத ஆளும்கட்சி எம்எல்ஏ-வான கே.பி.,(ஆர்.என்.ஆர்.மனோகர்) தனக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தை ஆதிதான் தூண்டிவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு அவரைப் பழிவாங்கத் துடிக்கிறார்.

மறுபுறம் தொலைக்காட்சி நிருபரான கிருத்திகாவை (பாலக் லால்வாணி) தன் குறைபாட்டை மறைத்து காதலிக்கத் தொடங்குகிறார் ஆதி. இறுதியில், மாலைக் கண் நோயினால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளித்து கிருத்திகாவை மணந்தாரா, அரசியல்வாதியின் பகையிலிருந்து தப்பித்தாரா என்பதே மீதிக் கதை.

மாலைக் கண் நோயை வைத்து முழுக்க முழுக்க கலகலப்பான ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சாச்சி.

அதிகம் அலட்டிக்கொள்ளாத நகைச்சுவையை மையமாகக் கொண்ட படங்களில் வைபவ் நச்சென்று பொருந்துகிறார். மாலைக் கண் குறைபாட்டை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார்.

x