சாஹோ- திரை விமர்சனம்


கேங்ஸ்டர்களின் தலைவரான ஜாக்கி ஷெராஃப், வாஜி நகரத்திலிருந்து இந்தியா வரும்போது கொல்லப்படுகிறார். அவரது இடத்தைக் கைப்பற்ற நடக்கும் அதிகார யுத்தமும், அதை முறியடித்து அதே இடத்தில் அவரின் வாரிசு அமர்வதுமே ‘சாஹோ’படத்தின் கதை.

`பாகுபலி' தந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம். படம் முழுக்க பிரபாஸின் ஆதிக்கம்தான். ‘பாகுபலி'க்குப் பிறகு வெகுவான ரசிகர்களை பிரபாஸ் சம்பாதித்திருப்பது அவரது அறிமுகக் காட்சியில் கிடைக்கும் வரவேற்பில் தெரிகிறது. ஆனால், அவர் அதற்கான நியாயத்தை நடிப்பால் செய்யவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் கவனிக்க வைக்கும் பிரபாஸ்... நிற்கிறார், ஓடுகிறார், குதிக்கிறார், பறக்கிறார். ஆனால், நடிக்கமட்டும் மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

தன் சுக, துக்கங்களை தன்னுடனேயே அடக்கிக்கொள்ளும் பெண், துணிச்சலான போலீஸ் அதிகாரி, பிரபாஸ் மீது காதல் வயப்படும் இளம்பெண் என ஒவ்வொரு காட்சியிலும் ஷ்ரத்தா கபூர் தேர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

“அவங்க சிரிக்கலாம். நீ சிரிக்கலாமா”என சொந்தத் தந்தையையே  கழுத்தை  நெரிக்கும்  கொடூர வில்லனாக வரும் சங்கி பாண்டே, போலீஸ் அதிகாரிகளாக வரும் நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், முரளி ஷர்மா ஆகியோரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

x