மாற்றம் வரும் வரை சாட்டைக்கு ஓய்வில்லை- ‘அடுத்த சாட்டை’ இயக்குநர் அன்பழகன்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

``ஏறாத இங்கிலீச... எம்புள்ள பேசுதுனு ஊரார கூட்டி வச்சு பெருமை பேசிக்கிடக்கும்... அந்த பேச்சுல வேதனை மறக்கும்..." 
யுகபாரதியின் வரிகளில் ஏழைப் பெற்றோர்களின் வாழ்க்கைக்குமான பேரனுபவம் இசையில் கலந்து அறையை நிரப்ப, இயல்பான புன்னகையுடன் வரவேற்கிறார்  இயக்குநர் அன்பழகன்.  ‘அடுத்த சாட்டை’ படத்தின் போஸ்ட் புரொடக் ஷன் வேலையில் இருந்தவர் காமதேனுவுக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினார். படத்தின் பாடல்கள் மெல்லிய பின்னணியில் ஒலிக்க, எங்களின் பேட்டி தொடங்கியது. 

மறுபடியும் சாட்டையெடுத்து சுழற்ற என்ன காரணம்?

இங்கே அதற்கான தேவை இன்னமும் இருக்கு என்பதேமுதல் காரணம். இதற்கு முன்பு  ‘சாட்டை’ படம் இயக்கும்போதே பள்ளிகளைப் பற்றி நிறைய தகவல்கள் திரட்டியிருந்தேன். பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களின் நீட்சி கல்லூரிகளிலும் பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்தேன். அப்பவே சமுத்திரக்கனி அண்ணன்கிட்ட காலேஜ் சப்ஜெக்ட் ஒண்ணு பண்ண ணும்னு சொல்லி இருந்தேன். திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு  “காலேஜ் சப்ஜெக்ட் பண்ணணும்னு சொல்லி இருந்தல்ல... அதை ஆரம்பி. நானே தயாரிக்கிறேன்”னு சொன்னார். படப்பிடிப்பு ஆரம்பிச்சு பாதியில் பிரபு திலக், இன்னொரு தயாரிப்பாளரா இணைந்தார். அவர் வேற யாருமில்லை, திலகவதி ஐபிஎஸ்-ஸின் மகன் தான். இப்படி, சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பார்வை கொண்டவர்களா இணைந்து உருவாகிருக்கு 'அடுத்த சாட்டை'. 

x