சினிமா பிட்ஸ்


இந்தியில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார் காஜல் அகர்வால். ஜான் ஆபிரகாம் நடிக்கும் ‘மும்பை சாகா' என்ற படத்தில் காஜல்தான் ஹீரோயினாம். இது, 1980-களில் மும்பையின் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாம்.

`பாம்பே பாட்ஷா'ன்னு டப்பிங் பண்ணி தமிழ்லேயும் விடுங்கப்பா...

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பின் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தென் கொரியாவில் வாடகைக்கு 
கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னந்தனியாக ஊர் சுற்றக் கிளம்பிவிட்டாராம்.

நேர்கொண்ட டிரைவிங் முக்கியம் மேடம்!

x