வேற்றுமொழி நடிகைகளுக்கே வாய்ப்புக் கிடைக்குது!-‘ஈரமான ரோஜாவே’ காயத்ரி


உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

விஜய் டிவியில் ‘கனா காணும் காலங்கள்’ நெடுந்தொடர் மூலம் அறிமுகமான காயத்ரி, ‘ஈரமான ரோஜாவே’, ‘சிவாமனசுல சக்தி’ தொடர்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் செல்லப் பெண்ணாகியிருக்கிறார். துள்ளல் வேகம், துடுக்கான பேச்சு என்று துறுதுறுவென நடித்துக்கொண்டிருக்கும் காயத்ரி, சின்னத்திரையில் தனது அனுபவங்கள், சினிமா வாய்ப்புக் குறித்த ஆவல் என்று பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார்.

உங்களது நடிப்புப் பயணம் தொடங்கியது எப்போது?

நான் மதுரைப் பொண்ணு. சென்னையில தான் விஸ்காம் படிச்சேன். காலேஜ் முடிச்சதும், ராஜ் டிவியில ஆங்கரா சின்னத் திரைக்கு அறிமுகமானேன். அப்போதான் ‘கனா காணும் காலங்கள்’ சீரியலோட ஆடிஷன் நடந்துச்சு. அதுல தேர்வாகி அப்படியே நடிக்க ஆரம்பிச்சேன். அந்த சீரியல் முடிஞ்சதுக்கு அப்புறம், சீரியல் பக்கம் கவனம் செலுத்தாம ஒருசில சேனல்கள்ல வேலை பார்த்துக்கிட்டேஆங்கரிங்கும் பண்ணிட்டு வந்தேன். அப்புறம் மறுபடியும் விஜய் டிவி. அங்கே ஒரு சில நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருந்தப்பதான், ‘ஈரமான ரோஜாவே’, ‘சிவா மனசுல சக்தி’னு ரெண்டு சீரியல்கள்ல நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு.  கிட்டத்தட்ட 9 வருஷமா விஜய் டிவியோட பயணம் செஞ்சிட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷமான பயணம்.

x