கென்னடி கிளப் - திரை விமர்சனம்


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் ‘கென்னடி கிளப்' என்ற கபடி அணி, எப்படி தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.  

கபடி வீராங்கனைகளாக வரும் அந்த 9 பெண்களும் தான் படத்தின் நாயகிகள். உண்மையான கபடி வீராங்கனைகளையே தேர்வு செய்திருப்பதால், படத்தில் வரும் போட்டிகள் நம்பகத்தன்மையைத் தருகின்றன. அவர்களின் தோற்றமும், நிறமும் எளிய வீட்டு கிராமத்துப் பிள்ளைகள் கேரக்டருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதேநேரத்தில், சிலருக்கு நடிப்பு கைகூடவில்லை. சிலரின் வாயசைப்பும் ஒன்றிப் போகவில்லை. அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். 

முன்னாள் ராணுவ வீரர், கபடி பயிற்சியாளராக நடிப்பிலும், பாடிலாங்குவேஜிலும் அசத்தியிருக்கிறார் பாரதிராஜா. கபடி பெண்களின் குடும்பத்தினரிடம் உருக்கமாகப் பேசுவது என ஆரம்பத்தில் அவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. கதை நகர நகர...  அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் சற்றே மிகையான உணர்வு வெளிப்பாடு தெரிகிறது.

x