அதிபராக கோத்தபய பிரதமராக மஹிந்த!- ராஜபக்ச சகோதரர்களின் ரகளை திட்டம்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இலங்கை அரசியலில் புதிய சலனங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. டிசம்பர் 8-ல் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் வேட்பாளராக இலங்கை பொதுஜன முன்னணி (எஸ்.எல்.பி.பி.) சார்பில் முன்னிறுத்தப்படுகிறார் கோத்தபய ராஜபக்ச. மஹிந்த ராஜபக்சவின் தம்பியும் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபயவின் வருகை, இலங்கை அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், இந்தியா, சீனா, அமெரிக்கா என்று சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்திருக்கிறது.

ராணுவம் டு கணினி

வலுவான அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த கோத்தபய, இலங்கை ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். விடுதலைப் புலிகளுடனான போர்களில் வியூகம் வகுத்தவர். 1992-ல், ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை டிப்ளோமா கணினித் தொழில்நுட்பம் படித்தார். முதலில் இலங்கையிலேயே கணினித் துறையில் வேலை பார்த்தவர், பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றார். லாஸ் ஏஞ்சலீஸில் பணிபுரிந்தார். இன்றுவரை இவர் அமெரிக்கக் குடிமகன்தான்.

x