1 கோடி ரூபாயை வீணடித்த கதாநாயகி!- ‘100% காதல்’ இயக்குநர் எம்.எம்.சந்திரமவுலி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விருதுகளையும் வசூலையும் அள்ளிய படம் ‘100% லவ்'. தற்போது தமிழில் ‘100% காதல்' என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் எம்.எம்.சந்திரமவுலியைச் சந்திக்கலாம் என்று அவரது விருகம்பாக்கம் அலுவலகம் சென்றிருந்தேன். ஆளுயர ட்ரைபாட் மீது பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்டமான பழங்காலத்து 70 எம்.எம். கேமராவே அவரது ரசனையைச் சொல்லாமல் சொல்கிறது. நட்பார்ந்த புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் மவுலி.

இளம் இயக்குநர்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில் இந்த வயதில் புதுமுக இயக்குநரா இறங்கியிருக்கிறீர்களே... ரிஸ்க் இல்லையா?

ஹலோ பாஸ்! சினிமாவுக்கு வயசு ஒரு விஷயமே இல்லை. சின்ன வயசுல இருந்தே சினிமாவுலதான் இருக்கேன். சென்னை திரைப்
படக் கல்லூரியில படிச்சுட்டுப் பல தெலுங்குப் படங்கள்ல ஒளிப்பதிவாளரா வேலை பார்த்தேன். அப்புறம் அமெரிக்கா போய் செட்டில் ஆகிட்டேன். அங்கே பல ஹாலிவுட் படங்கள்ல கேமரா வேலைகள், எடிட்டிங் வேலைகள் பண்ணினேன். தெலுங்குப் படங்களை வாங்கி அமெரிக்காவுல விநியோகம் பண்ற பிசினஸும் பண்ணிட்டு இருந்தேன். இயக்குநர் ஆகணும்னு ரொம்ப நாளா ஆசை. சென்னைதான் எனக்கு சினிமா சொல்லிக்கொடுத்த நகரம். அதனால முதல் படம் தமிழ்ல பண்ணனும்னு முடிவு பண்ணினேன். ரொம்ப நாள் காத்திருப்புக்குக் கிடைச்ச பலன்தான் ‘100% காதல்'.

x