கோமாளி- திரை விமர்சனம்


பிளஸ் 2 மாணவர் ஒரு விபத்தில் சிக்கி கோமாவுக்குச் சென்றால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு நினைவு திரும்பினால் அப்போது, இழந்த அனைத்தையும் மீட்க நினைத்தால் அதுவே ‘கோமாளி’.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு நினைவு திரும்பியவர் இந்த உலகை, நகரத்து வாழ்க்கையை, நவீனத்தை எப்படிப் பார்க்கிறார் என்ற ஒன்லைனில் சுவாரசியம் சேர்த்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். ஆனால், அந்த சுவாரசியம் திசை மாறிச் செல்வதுதான் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

பிளஸ் 2 மாணவருக்குரிய தோற்றத்தில் ஜெயம் ரவி அப்படியே பொருந்துகிறார். நினைவு வந்த பிறகும் பழைய நினைவுகளில் மூழ்குவதும், முதல் காதலியைச் சந்திப்பதுமாக சிறப்பாக நடித்துள்ளார்.

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, தங்கையின் அவமானத்தை ஏற்று பக்குவம் காட்டுவது, வேலை கேட்டு அலைவது, சாதிக்க நினைத்து எதுவும் செய்ய முடியாத இயலாமையை வெளிப்படுத்துவது, ட்ரெண்டுக்கு மாறுகிறேன் என்று மாட்டிக்கொண்டு முழிப்பது, எமோஷனையும் மனிதத்தையும் விழாமல் பிடிப்பது என்று தேர்ந்த நடிப்பில் மின்னுகிறார் ரவி.

x