என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
வடிவேலு காமெடிகள் சூழ வாழும் தமிழர்களிடம் ‘போண்டா’ மணிக்கு அறிமுகமே தேவையில்லை. பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துப் புகழ்பெற்றவர். “அடிச்சுக்கூட கேப்பாக... அப்பவும் சொல்லிடாதீக…” என்று வடிவேலுவைப் பதறவைத்து
விட்டு, தொந்தி துடிக்க ஓடும் ‘போண்டா’ மணிக்குப் பின்னே வலி நிறைந்த வாழ்க்கை உண்டு என்பது பலரும் அறியாதது.
இலங்கை அகதியாகத் தமிழகத்துக்குள் வந்த இவரது இயற்பெயர் கேதீஸ்வரன். படப்பிடிப்புக்காகத் திருநெல்வேலி வந்திருந்தவர் ‘காமதேனு’வுக்கு அளித்த பேட்டியிலிருந்து...
உங்க பூர்விகமான இலங்கையைப் பற்றி சொல்லுங்களேன்…