எனது கனவை நனவாக்கிய மகள்!- கீர்த்தி சுரேஷ் பற்றி பேசுகிறார் மேனகா


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

‘மகாநடி’ படத்தில் சாட்சாத் சாவித்ரியாகவே தோன்றிய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருப்பது அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. கேரளத்தில் கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களின் வாழ்த்து மழையிலும் நனைந்துகொண்டிருக்கிறார். தனது அம்மா மேனகா தவறவிட்ட தேசிய விருதை வென்றிருப்பதில் கீர்த்திக்கு மட்டுமல்ல, தாய் மேனகா, தந்தை சுரேஷ், பாட்டி சரோஜா என்று மொத்தக் குடும்பத்துக்கும் மெத்த மகிழ்ச்சி. கீர்த்தியின் கலைக்குடும்பத்தைச் சந்திக்க திருவனந்தபுரத்தில் உள்ள கீர்த்தியின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன்.

அழகும் பிரம்மாண்டமுமான அடுக்கு மாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருக்கிறது கீர்த்தியின் வீடு. காலிங் பெல்லை அழுத்தியதும் வந்து கதவைத் திறக்கிறார் மேனகா.

சுடச்சுட ஒரு கப் தேநீர் கொடுத்து வரவேற்ற மேனகா, தன்னுடைய திரையுலக வாழ்க்கை பற்றியும் மகளுக்குக் கிடைத்திருக்கும் விருது பற்றியும் கண்கள் விரிய பேசுகிறார்.

x