சினிமா பிட்ஸ்


தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் வெளிவரவுள்ள ‘சாஹோ' படத்தில் பிரபாஸுவுடன் நடிக்கும் ஷ்ரத்தா கபூரின் சம்பளத்தைப் பார்த்து தென்னிந்திய ஹீரோயின்கள் வயிற்றில் புகை கிளம்பியிருக்கிறது. தென்னிந்தியாவில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நாயகிக்கு 7 ‘சி’ சம்பளம் என்றால் புகையாமல் என்ன செய்யும்?

மூணால வகுத்துப் பார்த்தா கூலாகிடுவாங்க...

தெலுங்கில், சமந்தா நடித்து வெற்றிபெற்ற ‘ஓ பேபி', கடந்த வாரம் தமிழில் வெளியானது. படம் பார்த்தவர்கள், இது ‘17 அகெயின்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று சமூக வலைதளங்களில் கருத்துச் சொன்னதால் படக்குழு படு அப்செட்டாம்.
பார்த்தவுடனே கண்டுபிடிச்சா, அந்த கெட்டப்புக்கு என்ன மரியாதை?

‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பிறகு மஞ்சிமா மோகன் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. கவலையிலிருந்த மஞ்சிமா ‘துக்ளக் தர்பார்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் துள்ளி எழுந்துள்ளாராம். இழந்த மார்க்கெட்டை மீட்டெடுத்துவிடலாம் என்பது மஞ்சிமாவின் கணக்காம்.
விஜய் சேதுபதி மார்க்கெட்டையும் மீட்டெடுங்கப்பா...

x