திரையுலகமே கார்ப்பரேட் வலைக்குள் சிக்கிக்கிடக்கிறது!- ‘முந்திரிக்காடு’ இயக்குநர் மு.களஞ்சியம்


உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

மண் மணக்கும் கிராமியப் படங்களைத் தரும் இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்கும் மு.களஞ்சியம், நீண்ட இடைவெளிக்கு பிறகு, ‘முந்திரிக்காடு’ வழியாகத் தடம் பதிக்கவிருக்கிறார். மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவை வைத்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தியிருப்பதே ‘முந்திரிக்காடு’ சமூகப் பிரச்சினையை அலசும் படம் என்பதற்கான அடையாளம் எனச் ல்லியிருக்கும் மு.களஞ்சியத்திடம் காமதேனுவுக்காகப் பேசினேன்.

‘முந்திரிக்காடு’ திரைப்படம் எது குறித்துப் பேசுகிறது?

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ நாவலைத் தழுவித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆணவக் கொலைகளைப் பற்றிப் பேசும் நாவல் அது. படத்தில், அதையும் தாண்டி முந்திரி விவசாயத் தொழிலாளர்களின் வலிகளையும் பதிவு செய்திருக்கிறேன். இதுவரை எவரும் பேசாத முந்திரி விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும், குறைந்த ஊதியத்தில் முந்திரிக்காடுகளில் அவர்கள் படும் அவலத்தையும் இந்தப் படம் பேசும். முந்திரிக்காடுகள் அதிகமுள்ள தஞ்சை, புதுக்கோட்டை பகுதி
களிலும், ஆந்திர மாநிலத்திலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

x