சித்தார்த்தா... ‘காபி டே’ கர்த்தாவின் கதை!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை கர்நாடகத்தை மட்டுமல்ல, இந்திய தேசத்தையே உலுக்கியிருக்கிறது. அவரது மரணம் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. கர்நாடக அரசியல் எல்லையையும் தாண்டி, நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது அவரது மரணம். சித்தார்த்தா குதித்த நேத்ராவதி நதியில் அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதே அவரது முக்கியத்துவத்தைச் சொல்லிவிடும். யார் இந்த சித்தார்த்தா?

முதல் பாடம் கர்நாடகத்தின் சிக்மளூரு மாவட்டத்தின் மலைநாடு பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்தா. இவரது தந்தை கங்கையா ஹெக்டே காபி எஸ்டேட்முதலாளி. தாய் வசந்தி. சித்தார்த்தா மங்களூருவின் செயின்ட் அலோவிசியஸ் கல்லூரியிலும் பின்னர், மங்களூரு பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரம் படித்தவர். ‘வணிகத்தில் ஈடுபட்டுப் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க
வேண்டும்; அதேசமயம் மதிப்புக்குரிய வகையில்தான் அதைச் செய்ய வேண்டும்’ என்ற கனவு கல்லூரி காலத்திலிருந்தே இவரிடம் இருந்தது.

தந்தையிடமிருந்து ஒழுக்கம் சார்ந்த பல பாடங்களைக் கற்றுக்கொண்டவர். வணிகத்தில் இவர் முதல் பாடம் கற்றுக்கொண்டது, புகழ்பெற்ற முதலீட்டு வங்கியாளர் நிமேஷ் கம்பானியின் உறவினரான நவீன் பாய் கம்பானியிடம்தான். 1980-களின் தொடக்கத்தில் மும்பையில் ஜே.எம்.ஃபைனான்ஷியல் நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சி வர்த்தகராகச் சேர்ந்தார் சித்தார்த்தா. தற்போது ஜே.எம்.மார்கன் ஸ்டான்லி என்று அழைக்கப்படும் அந்நிறுவனம் கம்பானி குடும்பத்தினரால் நடத்தப்பட்டது.

x