என் அப்பாவுக்காக ஒரு படம்- ‘கென்னடி கிளப்’ பற்றி பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன் 


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

சமூக அவலங்களைப் பேசும் படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் சுசீந்திரன். பெண்கள் கபடி விளையாட்டை மையப்படுத்தி அவர் எடுத்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழா முடிந்தும் பிசியாக இருந்தவரைப் பேட்டிக்காக அணுகினேன். “கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க பிரதர். பாரதிராஜா சாரை வழியனுப்பிட்டு வர்றேன்” என்று சென்றவர். இரண்டு வாட்ஸ் - அப் ஸ்டேடட்ஸ் பார்க்கும் நேரத்தில் திரும்பிவந்து பேட்டிக்குத் தயாரானார்.

‘வெண்ணிலா கபடி குழு’, ‘கென்னடி கிளப்’ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

'வெண்ணிலா கபடி குழு' படத்துல கிராமத்து இளைஞர்களோட வாழ்க்கையில கபடி எப்படி கலந்திருக்குன்னு பேசியிருப்பேன் ‘கென்னடி கிளப்' படத்துல பெண்கள் கபடி மட்டுமில்லாம விளையாட்டுத் துறையில நடக்கும் ஊழல் பற்றிய விஷயங்களும் இருக்கும். சாமானியப் பெண்கள் லட்சிய வெறியோட ஒங்கித் தட்டும்போது ஊழலால் மூடப்பட்ட எல்லா கதவுகளும் உடைஞ்சு சுக்குநூறாகிடும், அதைத்தான் இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில உருவான கதை இது.

x