எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே மொழி காமெடிதான்!- `பழைய ஜோக்’ தங்கதுரை


உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

விஜய் டிவி-யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தொடங்கிய தங்கதுரையின் நகைச்சுவைப் பயணம், ‘ராமர் வீடு’, ‘அது இது எது’ என்று தொடர்ந்து வெள்ளித்திரை வரைக்கும் அவரை அழைத்து வந்திருக்கிறது. ‘ஏ1’, ‘ஜாக்பாட்’ என்று அடுத்தடுத்து முக்கியமான படங்களில் முகம் காட்டிவருகிறார். ‘காமெடி சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சிக்காகத் தனது  அருகில் இருந்தவர்களைக் கலாய்த்துக்கொண்டிருந்த அவரிடம் ஒரு கலகல பேட்டி.

    சாதா தங்கதுரை, காமெடியன் தங்கதுரையா எப்ப உருவெடுத்தீங்க?

பத்தாவது படிக்கும்போது ஜாலியா கிளாஸ்ல ஜோக் சொல்லுவேன். காலேஜ் போனப்ப அது கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆச்சு. மிமிக்ரியிலயும் கவனம் செலுத்தினேன். காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குப் போன இடத்துலயும் ஏதாவது துறுதுறுன்னு பேசிட்டு இருப்பேன். அப்பதான், ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி ஆரம்பிச்சிருந்தாங்க. என்னோட நண்பர்கள்தான் என்னை உற்சாகப்படுத்தி கலந்துக்கச் சொன்னாங்க. போட்டியாளர்கள்ல நான்தான் ரொம்பச் சின்னப் பையன். அப்ப ஆரம்பிச்ச பயணம். இப்ப வரைக்கும் ஜாலியா போகுது.

x