A1 - திரை விமர்சனம்


    காதலியின் தந்தை காதலுக்குக் குறுக்கே நின்றால், அவரைக் கொன்றே தீருவேன் என்று காதலன், மது போதையில் உளறி அதைத் தொட்டு பிரச்சினையில் சிக்கினால் அதுவே ‘A1.'

    நாளைய இயக்குநரில் நம்பிக்கைக்குரிய தடம் பதித்த ஜான்சன் ‘A1' படத்தின் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். குற்றப் பின்னணி யுள்ள கதையில் நகைச்சுவையை இழையோடவிட்டு தன்னை நிரூபித்துள்ளார்.

    மாஸ் ஹீரோ ஆசையை ஓரம்கட்டி வைத்து விட்டு கதைக்குத் தகுந்தாற்போல் நடிக்க சந்தானம் ஆயத்தமாகி இருப்பது ஆரோக்கி
யத்தின்  அறிகுறி. எல்லாவற்றையும் கலாய்க்கிறேன் பேர்வழி என்று இல்லாமல் அடக்கி வாசித்திருப்பது எடுபடுகிறது. உடல் மொழியில் கச்சிதம் காட்டி வசனங்களில் பக்குவம் கூட்டும் சந்தானம் ரசிக்க வைக்கிறார்.

    சந்தானத்தின் காதலியாக அக்ரஹாரத்துப் பெண்ணாக  தாரா அலிஷா பெர்ரி தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். மீரா கிருஷ்ணன், உமா  பத்மநாபன், தாரா உள்ளிட்ட எந்தப் பெண் கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

x