சூர்ப்பனகையா நடிச்சவளுக்கு துச்சாதனன் வேடம் - ‘ஆடை’ அனன்யா பேட்டி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

`ஆடை' படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்தப்  படத்தில் அமலாபாலின் தோற்றமே பிரதான மாகப் பேசப்பட்ட நிலையில்,  ‘நங்கேளி’ கதாபாத்திரத்தில் நடித்த அனன்யாவும் இப்போது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவரிடம், “காமதேனுவுக்காக ஒரு பேட்டி...” என்றதும், “பிரசாத் ஸ்டுடியோவில் சந்திக்கலாமே...” என பிகு பண்ணாமல் ஓகே சொன்னார்.
 அம்மா அப்பாவின் செல்லப் பிள்ளையான அனன்யா, அவர்களையும் உடன் வைத்துக் கொண்டே பேட்டிக்கு சமூகமளித்தார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் நிதானம். ஒரு அனுபவம் வாய்ந்த தேர்ந்த நடிகை யைப் போல் பேசுகிறார். அவருடனான உரையாடலில் இருந்து...

எப்படி அமைஞ்சது  ‘ஆடை’ பட வாய்ப்பு? 

எந்த வித சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணு நான். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். படிக்கிற காலத்திலேயே ஸ்போர்ட்ஸ், டான்ஸ்லதான் ஈடுபாடு அதிகமா இருந்துச்சு. கல்லூரியில் விஸ்காம் படிக்கும்போது  ‘லிட்டில் தியேட்டர்' என்ற அமைப்புடன் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.  

x