க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுப்பவர் என்று பெயர் வாங்கிய விக்ரம் பிரபுவின் சமீபத்திய படங்கள் ஏனோ சரியாகப் போகவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘அசுரகுரு’ படத்தின் ட்ரெய்லர் அந்தக் குறையைப் போக்கிவிடும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ஹாலிவுட் பாணியிலான ‘மேக்கிங்’ எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்தீப்பைச் சந்திக்க விருகம்பாக்கத்தில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றிருந்தேன். பதினான்காவது மாடியில் இருந்த பால்கனியில் நின்றுகொண்டிருந்தவர், “லிஃப்ட்ல ஏறி மேல வாங்க ப்ரோ” என்று வரவேற்றார். மாலை நேரத்துச் சென்னையின் அழகை ரசித்துக்கொண்டே இருவரும் உரையாடத் தொடங்கினோம்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்க ?