சினிமா பிட்ஸ்


'விஸ்வரூபம்' படத்தில் உமர் பாயாக வந்து கமலிடம் வில்லத்தனம் காட்டிய ராகுல் போஸிடமே ஒரு ஹோட்டல் வில்லத்தனத்தைக் காட்டியுள்ளது. சண்டிகரில் தங்கியிருந்த ஹோட்டலில், அவர் வாங்கிய இரண்டு வாழைப்பழத்திற்கு 442 ரூபாய்க்கு பில்லை நீட்டினார்களாம். வாழைப்பழ கணக்கை கேட்டு அதிர்ந்துபோன ராகுல் ட்விட்டரில் புலம்பியிருக்கிறார்.

மதுரையில தங்கியிருந்தார்னா, ‘கரகாட்டக்காரன்' காமெடியே பண்ணியிருப்பாய்ங்க...

புதிய கல்விக் கொள்கை குறித்து துணிந்து கருத்துச் சொன்ன சூர்யாவுக்கு சீமான் முதல் ரஜினி வரையில் அத்தனை வாழ்த்துகள். அதற்கெல்லாம் கரும்புள்ளி வைத்ததுபோல் அமைந்துவிட்டது அவர் நடிக்கும் காப்பான் படத்தின் ‘சிறுக்கி' பாடல். பாடலில் வனஜா என்ற பெண் பெயரைப் பயன்படுத்தி கொச்சையான வரிகள் வருவதால், “இப்படிப் பண்ணலாமா சூர்யா?” என்று வறுத்தெடுக்கிறார்கள் இணையவாசிகள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

x