உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in
“ஆறு வருஷத்துக்கு முன்னாடி, ஷுட்டிங்கை வேடிக்கை பார்த்த அனுபவம்கூட இல்லாத மதுரைப் பொண்ணு நான். இன்னிக்குத் தமிழ் மக்களுக்குப் பிடிச்ச ‘ஓவியா’வா மாறியிருக்கேன். எனக்கே ஆச்சரியமா இருக்கு” கண்கள் விரியச் சொல்கிறார் கோமதி ப்ரியா.
‘கலர்ஸ்’ சேனலில் ஒளிபரப்பாகும் ‘ஓவியா’ தொடரின் நாயகியாக பாவாடை, சட்டையில் அசத்திவரும் அழகுப் பெண். போரூரில் ஷூட்டிங்கில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினேன்.
பார்க்க ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க… என்ன படிச்சிட்டு இருக்கீங்க?
நான் இன்ஜினீயரிங் பட்டதாரிங்க. படிப்புல சுட்டின்னு பேர் வாங்கின ஆள் நான். மெரிட்ல சீட் கிடைச்சு மதுரையிலேருந்து சென்னைக்கு வந்து படிச்சேன். கேம்பஸ் இன்டர்வியூவுல வேலையும் கிடைச்சுது. என்னமோ தெரியலை, அந்த வேலை மேல எனக்குப் பிடிப்பே இல்லை. ஒரு வருஷத்திலேயே வேலையை விட்டுட்டேன்.