க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நவீன், தனது நண்பர் தனராம் சரவணன் இயக்கும் ‘கொளஞ்சி’ படத்தைத் தயாரிக்கிறார் என்ற செய்தி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
ஆனால், படப்பிடிப்பு முடிந்தும் அந்தப் படம் திரைக்கு வராமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் சற்றே அலுப்பு. இதோ, பல தடைகளை மீறி விரைவில் திரைக்கு வரவிருக்கிறான் ‘கொளஞ்சி’. சந்தோஷத்தில் இருக்கும் தனராம் சரவணனைச் சந்திக்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அடர்ந்த தாடி, மெலிந்த, இறுக்கமான தோற்றத்துடன் சிந்தனையாளர்களுக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறார் இந்த இளம் இயக்குநர்.
‘கொளஞ்சி'ன்னு கொளஞ்சிநாதர் சாமி பேரு வச்சிருக்கீங்களே? ஏதும் சென்டிமென்ட்டா?