சினிமா பிட்ஸ்


தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தாலும், தெலுங்கில் ‘ராவோயி சண்டமாமா' படத்தில் ஒரே ஒரு பாட்டில் மட்டும்தான் நடித்துள்ளார். அந்தக் குறையை போக்கும் விதமாக ஒரு முழு நீள தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளாராம்.
மூச்சு விடாம டயலாக் பேச முடியுமா?

`கடாரம் கொண்டான்' படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் தனது 58-வது படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விக்ரம் ஒரு பாட்டும் பாடுகிறார்.
வலியறியாது இவன் தேகமோ?

இந்தியாவின் முதல் சம்ஸ்கிருத படமான ‘அஹம் பிரம்மாஸ்மி'யை இயக்கியவர் ஆஸாத். இவர் தற்போது தமிழில் ‘ராஜ்யவீரன்' என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளாராம். தொடர்ந்து தேசப்பற்றை வலியுறுத்தும் படங்களாக இயக்கும் இவர் முன்னாள் ராணுவவீரராம்.
படம் நல்லாருந்தாலும் தமிழ்க்குடிகள் திட்டுவாங்களே!

சமீபத்தில் தான் நடித்த ‘மியா' இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டார் இனியா. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், தனது ‘அமையா என்டர்டெயின்மென்ட்' நிறுவனத் தயாரிப்பில் சொந்தப் படத்தில் நடிக்க கதை கேட்க ஆரம்பித்துவிட்டார் அம்மணி.
என் ‘இனியா' தமிழ் மக்களே!

x