சா.மகிழ்மதி
விஜய் டிவியின் ‘அவளும் நானும்’ தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து நெடுந்தொடர் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த மெளனிகா, தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘பூவே செம்பூவே’ தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதிரடி நாயகியாக அவதரிக்கவிருக்கும் மெளனிகாவைச் சந்திக்க ஐயப்பன்தாங்கல் ஷுட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்தேன். மிடுக்கான போலீஸ் உடையில் வந்தமர்ந்தவரிடம் ஒரு மினி பேட்டி:
தமிழ் கூறும் நல்லுலகில் நல்ல பேர் வாங்கிட்டீங்க. பூர்விகமே தமிழ்நாடுதானா?
நான் பிறந்தது சென்னைதான். ஆனால், வளர்ந்தது படிச்சது எல்லாமே ஆந்திரா. ஆரம்பத்துல சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடினப்போ தமிழ்ல பேச ரொம்பவே கஷ்டப்பட்டேன். இப்போ, நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். இல்லைன்னா தமிழ்நாட்டுல நல்ல பேர் வாங்க முடியுமா?