உ.சந்தானலெட்சுமி
ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தின் அலை அடங்குவதற்குள், அவரது அடுத்த படமான ‘ஜாக்பாட்’ வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. ‘கதை சொல்லப் போறோம்’, ‘காத்தாடி’, ‘குலேபகாவலி’ ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த சந்தோஷத்தில் இருந்த கல்யாணை, வடபழனியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
அதென்ன, ‘ஜாக்பாட்’ன்னு ஒரு டைட்டில்?
படத்தோட ஹீரோயின்ஸ் ரெண்டு பேரும் ஒரு மிகப் பெரிய விஷயத்தை நோக்கி ஜாலியா டிராவல் பண்றதுதான் கதை. அந்த விஷயம் சக்சஸ் ஆனா அது அவங்களுக்கு ஜாக்பாட். இதுதான் கதை… அச்சச்சோ கதையைச் சொல்லிட்டேனே!