பார் சுற்றும் பாட்டில் மூடி சவால்!


க.விக்னேஷ்வரன்

இப்போதெல்லாம் இணையவாசிகளுக்கு ஏதாவது ஒன்றை ட்ரெண்ட் செய்யவில்லை என்றால் பொழுது போவதில்லை. ``பின்னே... எவ்வளவு நாளைக்குத்தான் லைக் பண்ணிக்கொண்டும் கமென்ட் போட்டுக்கொண்டும் காலத்தைத் தள்ளுவது? ஒரு சுவாரசியம் வேண்டாமா ப்ரோ?” என்ற கேள்வியின் நீட்சிதான் விதவிதமான இணைய சவால்கள். அப்படி இன்றைக்கு சகலரையும் கவர்ந்திருக்கும் சவால் ‘பாட்டில் மூடி சவால்’.

இந்தச் சவாலின் வரலாறு பூகோளத்தைப் பார்ப்பதற்கு முன்னால், இன்று வரை கடந்து வந்த இணைய சவால்களை நினைவு கூர்ந்துவிடுவோம். அதுதானே சம்பிரதாயம்!

முதலில் ‘ஐஸ் பக்கெட் சவால்’. ஜிலீரென்ற கதறலுக்கு உத்தரவாதம் தரும் இந்தச் சவால் பிரபலமானபோது, ஒபாமா முதல் ஒட்டன்சத்திரவாசிகள் வரை பலரும் குளிர் நீர் நிரம்பிய பக்கெட்டை கொட்டிக் கவிழ்த்துக்கொண்டு அலறிய வீடியோக்களை அகிலம் கண்டது. இதனால், ‘என்ன மாதிரியான சமூகத்தில்…’ என்று சில அறச்சீற்ற சமூக (வலைதள) போராளிகள் கடுப்பாகி, யாரேனும் ஒரு ஏழைத்தாயின் மகன் / மகள் கையில் ஒரு பக்கெட் அரிசியைத் திணித்து, அதை போட்டோ எடுத்து ‘ரைஸ் பக்கெட் சவால்’ என்று அலப்பறையைக் கூட்டினர்.

x