கார்ப்பரேட் காட்டுக்குள் சமூக விலங்கு!- ‘ஆடை’ இயக்குநர் ரத்னகுமார்


க.விக்னேஷ்வரன்

‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரத்னகுமார், தனது அடுத்த படமான ‘ஆடை’ மூலம் பரபரப்பைக் கிளப்ப வருகிறார். ஃபர்ஸ்ட் லுக், டீசரிலேயே ஃபயரைப் பற்றவைத்த படம். ‘ஏ’ சர்ட்டிஃபிகேட்டுடன் வெளியாகப்போகிறது என்ற செய்தி இண்டஸ்ட்ரிக்குள்ளேயே ‘ஏன்’களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. படத்தின் கலரிங் வேலையில் பிசியாக இருந்த ரத்னகுமாரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சிவந்த விழிகள், அடர்த்தியான தாடி என்று டெரர் கெட்டப்பில் இருந்தவர் பளிச் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

செம்ம ஜாலியான படத்தைக் கொடுத்துட்டு, ரெண்டாவது படமே ‘ஏ' சர்ட்டிஃபிகேட்டா?

கொஞ்சம் சென்சிட்டிவான விஷயத்தைப் பேசினாலே இங்கே ‘ஏ' சர்ட்டிஃபிகேட் தான். மத்திய தணிக்கை குழுன்னு பேர் இருந்தாலும் மாநிலத்துக்கு ஏத்த மாதிரி தணிக்கை விதிமுறைகள் மாறுது. ‘ஆடை’ படத்துல சில விஷயங்களைத் தவிர்த்துட்டா ‘யு/ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுக்க ரெடியா இருந்தாங்க. நான்தான் படத்தோட உண்மைத்தன்மை கெட்டுடக் கூடாதுனு மறுத்துட்டேன். ‘ஏ' சர்ட்டிஃபிகேட் படமாக இருந்தாலும் இது சமுதாயத்துக்குத் தேவையான ஒரு படமா இருக்கும்.

x