`மான்ஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து பிரியா பவானி ஷங்கருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. அடுத்ததாக அருண் விஜய்யுடன் 'மாஃபியா' படத்திலும், 'நேற்று இன்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும், கதையை முழுமையாகக் கேட்டு கதாபாத்திரம் பிடித்தால்தான் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம் பிரியா.
அறிவுள்ள புள்ள... பொழச்சுக்கும்!
‘‘ ‘விஸ்வாசம்’ மாதிரியான பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துவிட்டு ‘நேர்கொண்ட பார்வை’ மாதிரியான சிறிய பட்ஜெட் படத்தில் நடிப்பதை பாராட்டுகிறேன்" என்று ஜோதிகா சமீபத்தில் பேட்டியொன்றில் அஜித்தைப் பற்றி பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. அப்புறம் என்ன?, "என்னாது... நேர்கொண்ட பார்வை சின்ன பட்ஜெட் படமா?" என்று அஜித் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பேசாம 'தல' ரசிகர்கள் பக்கமே 'தலை'யாட்டி வெப்போம்... இல்லாட்டி நம்மையும் திட்டுவாங்க!