இந்தப் படம் ஆர்யாவுக்கு பெரிய  ‘கம்பேக்’கா இருக்கும்!- ‘மகாமுனி’ இந்துஜா


உ.சந்தானலெட்சுமி

``ஹாய்... நான் இப்போ விஜய் படத்தில் நடிக்கிறேன் தெரியுமா?" என்றபடி ஏகப்பட்ட ஃபீலிங்கில் வந்தமர்கிறார் இந்துஜா. முதல் படமான ‘மேயாத மானிலேயே’ கானா பாட்டுக்கு கலக்கல் குத்தாட்டம் போட்டு, வடசென்னை தமிழில் தாண்டவமாடிய இந்துஜா, எந்த அலட்டலும் இல்லாமல் அத்தனை பாந்தமாய் பேச ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு வார்த்தையிலும் வந்து விழுகின்றன குறும்புகளும், எதிர்காலத்திற்கான திட்டமிடலும்.

மகாமுனியில் உங்க லுக், மேக்கப் எல்லாமே வேற மாதிரி இருக்கே?

ரொம்ப சாதாரண மனைவி கதாபாத்திரம் அது. ஆனா, அதுக்கான மெனக்கிடல்தான் இவ்ளோ தூரம் பேர் வாங்கிக் கொடுத் திருக்கு. தேங்க்ஸ் டு சாந்தகுமார் சார். அஞ்சு வயசு குழந்தைக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி பெரிய பொட்டு வெச்சு, கண்ணாடி வளையலெல்லாம் போட்டு, எண்ணெய் வழிய படிய சீவிய தலையோட இருப்பேன். இந்த கேரக்டருக்கு இப்படித்தான் வேணும்னு இயக்குநர் சொன்னதுமே நானே மேக்கப் போட்டுட்டு வந்து எதிர்ல நின்னேன். “மூக்குத்தி போட்டா இன்னும் நல்லாயிருக்கும் சார்”னு சொல்லி மூக்குத்தி போட்டு வந்து காட்டினதும், “சூப்பர்”னு சொல் லிட்டார். அப்படித்தான், என்னோட கெட்டப் மாறினது. இதுக்கு மேல படத்தைப் பற்றிச் சொன்னா சார் திட்டுவார்.

x