திரை விமர்சனம்: ஜீவி


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

    கிராமத்திலிருந்து வேலைதேடி சென்னைக்கு வருகிறார் நாயகன் வெற்றி. அவருக்கு வேலையும் வாங்கிக்கொடுத்து, தனது அறையில் தங்கவும் வைத்துக்கொள்கிறார் நண்பன் கருணாகரன். இவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளருடைய நகைகளை எளிதாகத் திருடிவிடுகிறார் வெற்றி. அதிலிருந்து தப்பிக்க சாட்சியங்களை உருவாக்கி, போலீஸைக் குழப்பிவிடுகிறார். ஆனால் அந்தத் திருட்டு, அவரது புத்திசாலித்தனங்களையும் மீறி அவரது கடந்த காலத்தின் தொடர்ச்சியை அவருக்குக் காட்டுகிறது.

நண்பனையும் பிரிய வேண்டிய நிலையில், தாம் திருடியது தவறு என்பதை வெற்றி உணர்ந்தாரா, திருடிய நகைகளால் அவர் பலனடைய முடிந்ததா என்பதே ஜீவி.

x