பிட்லீ
நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கே முன்னுரிமை தருவது என்ற முடிவில் இருக்கிறார் த்ரிஷா. தற்போது நடித்து வரும் ‘ராங்கி' படத்தில் ஒரு மீடியா நிறுவனத்தின் சிஇஓ வேடத்தில் நடித்துள்ளார். இதுவும் தனக்கு முக்கியப் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் த்ரிஷா.
`96' பார்ட் 2 யோசிக்கலாமே?
சாய் பல்லவியைத் தொடர்ந்து தமன்னாவும் மும்பையில் வீடு வாங்கி குடியேறியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கோடிகளைக் கொட்டி பதினான்காவது மாடியில் வீடு வாங்கியுள்ள தமன்னா, பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம்.
உச்சாணிக்கொம்பில் கொடிகட்டிப் பறக்க வாழ்த்துகள்!