உ.சந்தானலெட்சுமி
‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிப்பரப்பாகிவரும் ‘மைனா’, எடுத்த எடுப்பிலேயே மக்களின் மனம் கவர்ந்த தொடராகியிருக்கிறது. குழந்தை தொழிலாளர்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொடரில், இரக்கமற்ற முதலாளியான சிங்கப்பெருமாளை எதிர்கொள்ளும் சிறுமி மைனாவாக நடித்து அசத்துகிறாள் அழகுக் குட்டி திவ்யதர்ஷினி. குன்றத்தூர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த திவ்யதர்ஷினியுடன் ஒரு மினி பேட்டி.
நடிப்புல பின்றீங்களே... ‘மைனா’தான் முதல் சீரியலா?
குட்டிப் பாப்பாவா இருக்கும்போதே நடிக்க ஆரம்பிச்சிட்டேன். நிறைய சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். ‘மைனா’ சீரியலுக்கான ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆடிஷன் ரொம்ப ஜாலியாத்தான் இருந்தது. அப்புறம், நான் செலக்ட் ஆகிட்டதா சொன்னாங்க. ஏதோ சின்ன ரோலாத்தான் இருக்கும்னு நெனச்சேன். ஆனா, ஹீரோயினே நான்தான்னு தெரிஞ்சப்போ ரொம்ப ஹேப்பியாகிட்டேன்!