ஹாரரும் காமெடியும் கலந்த காட்டேரி!- திகில் இயக்குநர் டிகே பேட்டி


உ.சந்தானலெட்சுமி

காமெடியும் ஹாரரும் சேர்ந்து கலங்கடித்த ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே, தற்போது ‘காட்டேரி’ மூலம் கதறடிக்கத் தயாராகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பயத்தைப் பற்றவைத்திருக்கிறது. இரண்டாவது படமான ‘கவலை வேண்டாம்’ எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், மீண்டும் பேயுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறார் டிகே. இதிலும் காமெடி தூக்கலாகவே தெரிகிறது. இளம் நீல நிற பெயின்டில் அமைதி தவழும் தனது அலுவலகத்தின் வரவேற்பறையில் உற்சாகத்துடன் என்னோடு கை குலுக்குகிறார் டிகே.

படத்தோட தலைப்பு மாதிரியே, ட்ரெய்லரும் பயமுறுத்துதே?

‘காட்டேரி’ங்கிற தலைப்பைப் பார்த்துட்டு எல்லாருமே இது ஏதோ ‘வேம்பயர்’ படம்னு நினைக்கிறாங்க. அப்படி இல்ல. நம் மூதாதையர்கள் காட்டுக்குள்ள இருக்கிற சாமியைக்கூட காட்டேரின்னு சொல்வாங்க. சின்ன வயசுல நம்ம பாட்டிங்க சொன்ன ஏதோவொரு திகில் கதையை ஞாபகப்படுத்துற படமா இது இருக்கும். முதல்ல ‘கருப்பு’ன்னுதான் டைட்டில் யோசிச்சேன். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் இந்த டைட்டிலைச் சொன்னார். சரியான டைட்டில்னு அதையே வச்சிட்டோம்.

x