இந்தப் படத்துக்கு அப்புறம் வெற்றி வேற லெவல்!- ‘ஜீவி’ இயக்குநர் வி.ஜெ.கோபிநாத்


விக்கி

“மனுஷனுக்கு வரக் கூடாத வியாதி விரக்தி” என்று தத்துவம் பேசும் ‘ஜீவி’ படத்தின் டீஸர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘8 தோட்டக்கள்’ படத்தில் குழப்பமான போலீஸ் அதிகாரியாக நடித்த வெற்றி, இந்தப் படத்தில் அடர் தாடி, உக்கிரப் பார்வை கொண்ட அறிவுஜீவி இளைஞராக அசத்துகிறார். படம் பற்றிப் பேசுவதற்காக படத்தின் இயக்குநர் வி.ஜெ.கோபிநாத்தைச் சந்திக்கச் சென்றிருந்தேன். உதவி இயக்குநர்களுடன் காட்சி மொழி பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர், பேட்டி என்று கேட்டதும் உற்சாகமாகிறார்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்க ?

பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஹோட்டல் மேனேஜ் மென்ட் டிகிரி முடிச்ச உடனேயே முடிவு பண்ணிட்டேன் நமக்கு இந்த வேலை செட் ஆகாதுன்னு. சின்ன வயசுல இருந்தே எனக்குக் கதை

x