பிக் பாஸ் ஷோவில் வருவது எல்லாம் உண்மையில்லை!- நிஜத்தைச் சொல்லும் ஜனனி


க.விக்னேஷ்வரன்

சமூக வலைதளங்களில் எல்லோரும் நேசமணிக்காகப் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த நாளின் மாலை நேரத்தில் பெசன்ட்நகர் கடற்கரையோரம் காபி ஷாப்பில் ஜனனிக்காகக் காத்திருந்தேன்.

கடற்கரையைத் தங்க நிறத்தில் மாற்றிக்கொண்டு சூரியன் மறைய ஆரம்பித்த பிறகு, சிவப்பு நிற உடையில் பளிச்சென்று வந்தமர்ந்தார் ஜனனி. மலையாள சினிமாக்களில் முழுநேரமாகவும், மிச்ச சொச்ச நேரத்தில் தமிழிலும் தலைகாட்டும் ஜனனியிடம் தமிழக ரசிகர்கள் சார்பாகக் கேட்க நிறையவே கேள்விகள் இருந்தன. ஜில்லிடும் மில்க் ஷேக்குடன் உரையாடலை ஆரம்பித்தேன்.

ரொம்ப வருஷமா உங்களை ஆளை காணோமே... மலையாள தேசத்திலேயே செட்டில் ஆகிட்டீங்களா?

x