உ.சந்தானலெட்சுமி
மீண்டும் பிக் பாஸ் ‘சீசன் 3’ களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த ஜூரம் அடுத்த நூறு நாட்களுக்கு அனைவரையும் தொற்றிக்கொள்ளும். திரையுலக பிரபலங்கள் சிலருக்கு இந்த நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்த வரிசையில், ‘பரதேசி’ கருத்தகன்னியாக அறிமுகமாகி, ‘மெட்ராஸ்’ மேரியாக நம்மை வசீகரித்தவர் நடிகை ரித்விகா. பிக் பாஸ் ‘சீசன் 2’வின் வெற்றியாளராகி ரசிகர்கள் மனதில் அழுந்த இடம்பிடித்த அவரிடம் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து...
பிக் பாஸ் ஷோவுக்கு முன்னும் பின்னும் ரித்விகாவின் கலைப்பயணம் எப்படி..?
‘பிக் பாஸ் சீசன் 2’ முடிஞ்சு சரியா ஒரு வருஷம் ஆகிருச்சு. அதுக்கு முன்னாடி, ஒரு நடிகையா மட்டும்தான் எல்லாத்துக்கும் என்னைய தெரியும். இந்த ஷோவில் வந்தபிறகு, ரித்விகாவோட குணம், அவங்க எப்படி இருப்பாங்கிற இயல்பான தனிப்பட்ட விஷயங்களும் மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அதில்லாம, முன்பைவிட இப்ப கொஞ்சம் அதிகமா ரசிகர்கள் மனசுல பதிஞ்சிருக்கேன். இங்க மட்டுமல்ல... மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் போயிருந்தப்ப நல்லாவே அடையாளம் கண்டுபிடிச்சு வந்து பேசினாங்க. ஸோ... தாங்க்ஸ் டு பிக் பாஸ்!