இளையராஜா இப்படி இருக்கிறார்?


வெ.சந்திரமோகன்

‘மேற்குத் தொடர்ச்சி மலை’தான் இப்போதைக்கு இறுதியாக வந்த படமாக இருக்க வேண்டும். அதுவும் 2018. இந்த ஆண்டு இதுவரை இளையராஜா இசையமைத்து ஒருபடம்கூட வெளியாகவில்லை. ஆனாலும், இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கும் இளம் இசையமைப்பாளர்களையும் தாண்டி, அனுதினமும் அலுக்காத பேசுபொருளாக இருக்கிறார் இளையராஜா.

தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்ட ‘96’ படத்தின் இசையமைப்பாளர் பற்றி கடுமையான மொழியில் அவர் பேசியதாக எழுந்த சர்ச்சை, அவரது 76-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில், ஒரு செக்யூரிட்டியை அவமதித்ததாக ஒரு சர்ச்சை, ‘என் பாடல்களால்தானே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? ” என்று அவர் சொன்னதில் இருந்த ‘அகம்பாவம்’ குறித்த சர்ச்சை… இதோ, எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் நிரந்தரத் தடை ஆணை! போதாதா? இணைய உலகம் தொடங்கி எல்லா திசைகளிலும் காரசாரமான விவாதங்கள்.

படைப்பூக்கமும் காப்புரிமையும்

x