க.விக்னேஷ்வரன்
கேரளத்தின் வனப்பை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தது போல் மனதை அள்ளுகிறார் மஹிமா நம்பியார். ‘சாட்டை’ படத்தின் மூலம் அறிமுகமான கையோடு தமிழ், மலையாளம் என்று அடுத்தடுத்த படங்களில் மேடம் ரொம்ப பிஸி. மலையாளக் கரையோரம் தங்கியிருந்தபடியே, தமிழ் பாடும் அழகுக் பதுமையிடம் காமதேனு பேட்டிக்காக பேசினேன்.
கேரளாவிலேயே இருக்கீங்களே... சினிமாவில் நடிக்க மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருவீங்களா?
அய்யடா..! அப்படி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் பெர்சனல் கமிட் மென்ட்ஸ் இருக்கிறதால கேரளாவுலேயே தங்க வேண்டியிருக்கு. மத்தபடி, மலையாளத்தைவிட தமிழ்ப் படங்கள்லதான் அதிகம் நடிச்சிட்டுஇருக்கேன். எனக்கு ஃபர்ஸ்ட் சான்ஸ் கொடுத்ததே தமிழ் சினிமாதான். நல்ல கதாபாத்திரம் கிடைச்சா மட்டும்தான் மலையாளத்தில் நடிக்கிறேன். மத்தபடி, ஐ ஆல்வேஸ் லவ் தமிழ் சினிமா!