என வாழ்க்கை பசங்களுக்கானது!- பாச மழை பொழியும் ஜேபி அண்ட் சன்ஸ்


உ.சந்தானலெட்சுமி

தமிழ் சினிமாவின் கம்பீரத் தந்தை என்று ஜெயபிரகாஷைச் சொல்லலாம். சேரனின் ‘மாயக்கண்ணாடி’ படத்திலேயே அறிமுகமானாலும்,  ‘பசங்க’ படத்தில் பள்ளி மாணவனின் தந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். முன்னணி நட்சத்திரங்களின் ‘திரைத் தந்தை’யாக ஜொலிக்கும் ஜெயபிரகாஷ், வெற்றிகரமான தயாரிப்பாளரும்கூட. தந்தையர் தின (ஜூன் 16) ஸ்பெஷலாக, ஜெயபிரகாஷையும் அவரது மகன்களான நிரஞ்சன் மற்றும் துஷ்யந்த்தையும் சந்தித்தேன்.

“எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. மனசுக்கு சரின்னு படுறத செய்யுங்க. நான் இருக்கேன். எப்பவும் துணையா இருப்பேன். அப்பா எங்ககிட்ட எப்பவும் சொல்றது இதுதான்” என்று தொடங்குகிறார் ‘ஈசன்’ படப் புகழ் துஷ்யந்த்.

“ ‘நான் மகான் அல்ல’ படம் வந்தப்ப, ‘இப்படியொரு ஃப்ரெண்ட்லி அப்பா நமக்கில்லையேனு நடிப்புல ஏங்க வச்சுட்டாரு’ன்னு என்னோட ஃப்ரெண்ட்ஸெல்லாம் சொல்வாங்க. எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது நடிப்பில்லை. அப்பா நிஜத்திலயும் அப்படித்தான்னு” தம்பி துஷ்யந்தைப் போலவே தந்தை புகழ்பாடுகிறார் அண்ணன் நிரஞ்சன்.

x