க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in
திருவான்மியூர் பத்திரிகையாளர் காலனியில் உள்ளது நடிகர் கருணாகரனின் வீடு. கீழ்தளத்தில் அவரது மாமனாரின் கோகுலம் பத்திரிகை அலுவலகம். அதைக் கடந்து மேலே சென்றால், உள்ளங்கால்களைக் கூசச் செய்கிற தரைவிரிப்பு வரவேற்கிறது. வெள்ளை சட்டையில் கலைந்த தலைமுடியை கோதியபடியே விரல்களால் மேலும் கலைத்துவிட்டு, ட்ரேட்மார்க் சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் கருணாகரன்.