காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
>> ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுப் பெண் ஆஷிமா நர்வல் வேலைக்குக் கிளம்பும்போதே விஜய் ஆண்டனியும் வெளியே கிளம்பிச் செல்கிறார். ஒருநாள் ஆஷிமாவைச் சந்திக்க வரும் ஆந்திர அமைச்சரின் சகோதரர் கொல்லப்படுகிறார். காவல் துணை ஆணையர் அர்ஜுன் இந்த வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. என்ன குற்றம் நடந்தது? கொலையாளி யார்? இந்த வழக்குக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது ‘கொலைகாரன்’
>> ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஒரு கொலை வழக்கையும், அதில் உள்ள திருப்பங்களையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது.